கரூர் 
மாவட்ட செய்திகள்

விவசாய கடன் அட்டை வழங்குவது குறித்த சிறப்பு முகாம்

விவசாய கடன் அட்டை வழங்குவது குறித்த சிறப்பு முகாம் நடந்தது.

நொய்யல்,

நஞ்சை புகழூர் ஊராட்சிக்கு உட்பட்ட தவிட்டுப்பாளையம் ஊராட்சி மன்றத்தில் விவசாயத் துறை சார்பில் விவசாய கடன் அட்டை வழங்குவது குறித்த சிறப்பு முகாம், விவசாயிகளுக்கு கிசான் கார்டு விண்ணபிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேளாண்மை துறை சார்பாக வழங்கப்படும் பல்வேறு மானியங்கள் மற்றும் பயிர் காப்பீட்டு திட்டங்கள் பற்றி விவசாய அதிகாரி ரேணுகாதேவி விவசாயிகளிடையே விளக்கி சிறப்புரை நிகழ்த்தினார்.

நஞ்சை புகழூர் ஊராட்சி சிறப்பு வேளாண் அதிகாரி ஹேமாவதி நஞ்சை புகழூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள விவசாய மானியம் தொடர்பாக விளக்கி பேசினார். புகழூர் கூட்டுறவு வங்கி செயலாளர் பல்வேறு விவசாய கடன்கள் பற்றி விளக்கி பேசினார். முகாமில் நஞ்சை புகழூர் சுற்று வட்டார பகுதியினை சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கடன் அட்டை விண்ணப்பித்தும் மற்றும் விவசாய மானியம் தொடர்பாகவும் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.

SCROLL FOR NEXT