பந்தலூர்
பந்தலூர் அருகே ஏலமன்னாவில் உள்ள சாலையோரத்தில் அடர்ந்த வனப்பகுதி காணப்படுகிறது. இந்த நிலையில் அந்த வனப்பகுதியில் உள்ள காய்ந்த புற்களில் நேற்று திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றும் நன்றாக வீசியதால் கொழுந்துவிட்டு தீ எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற பிதிர்காடு வனத்துறையினர் தீயை முற்றிலுமாக அணைத்தனர்.