மாவட்ட செய்திகள்

கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய கல்லூரி பேராசிரியர் கைது

கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய கல்லூரி பேராசிரியர் கைது

குழித்துறை,

அருமனை பகுதியை சேர்ந்தவர் ஷைபா (வயது 30). பட்டதாரி. இவருக்கும், வீயனூர் அருகே குட்டக்குழி வட்டவிளையை சேர்ந்த ஜெயபாலன் மகன் அருண் பால் என்பருக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. அருண் பால் கல்லூரி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். திருமணம் ஆன சில மாதங்களிலேயே அருண்பால் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு ஷைபாவை கொடுமைப்படுத்த தொடங்கியதாக தெரிகிறது.

இது குறித்து ஷைபா மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடந்தி அருண் பால், அவரது தந்தை ஜெயபாலன் உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அருண் பாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT