மாவட்ட செய்திகள்

தானேயில் மண்சரிவால் 3 வாகனங்கள் சேதம்

தானே வாக்ளே எஸ்டேட் பகுதியில் உள்ள சாலையோரம் நேற்று முன்தினம் இரவு 2 கார்கள் மற்றும் ஒரு ஆட்டோ நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தானே,

கட்டுமான பணிகள் அந்த சாலை அருகே நடந்து வந்தது. மேலும் அந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென சாலையோரத்தின் ஒருபகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கு பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள் மற்றும் ஒரு ஆட்டோ சிக்கி சேதமடைந்தன.

அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவலறிந்த பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து பள்ளத்தில் சிக்கிய வாகனங்களை மீட்டனர். இதனால் அந்த பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.

SCROLL FOR NEXT