பெரியகுளம்:
பெரியகுளத்தில் இருந்து கும்பக்கரை அருவிக்கு செல்லும் சாலையில் கட்டப்பாலம் அருகே வாய்க்கால்கரை கருப்புசாமி கோவில் உள்ளது.
பிரசித்தி பெற்ற இக்கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜைகள் உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் வேத வித்தகர்கள் வேதமந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்களுடன் புனித நீர் கோபுர கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
விழாவில் பெரியகுளம், காடுபட்டி, வீரக்கல், அல்லிநகரம், தேனி, சிவகங்கை, மதுரை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.