மாவட்ட செய்திகள்

குன்றத்தூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

குன்றத்தூர் அருகே திருமணமான 5 மாதத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

தற்கொலை

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலம், இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பவித்ரா (வயது 27), இவர் தனது தாய்க்கு உதவியாக துணி வியாபாரம் செய்து வந்தார். இவர் திருப்பூரை சேர்ந்த கண்ணன் என்பவரை காதலித்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு வந்த பவித்ரா இங்கேயே இருந்துள்ளார்.

நேற்று அவரது பெற்றோர் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பவித்ரா தூக்குப்போட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ஆர்.டி.ஓ. விசாரணை

இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பவித்ரா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 5 மாதங்களில் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து