ஆம்பூர்
ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று முன்தினம் ஆம்பூர் கம்பி கொல்லை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். சந்தேகமடைந்த போலீசார் அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் ஆம்பூரை அடுத்த நாயக்கனேரி அருகே உள்ள சீக்கஜுனை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 23) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.