மாவட்ட செய்திகள்

குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு

தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பலியானார்

தூத்துக்குடி:

தூத்துக்குடி கிருபை நகரைச் சேர்ந்தவர் ஏகமூர்த்தி. இவருடைய மகன் முத்துகுமார் (வயது 24). இவர் தன்னுடைய நண்பருடன் கோரம்பள்ளம் குளத்தில் குளிக்க சென்றாராம். அப்போது எதிர்பாராதவிதமாக முத்துகுமார் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.