செய்திகள்

இந்தியனாக இருந்தால் உள்ளே வராதே... ஆபாச பட நடிகையின் கோபம்..!!!

"இந்தியர்களுக்கு எதிராக வழக்கு தொடர இருப்பதாக ஆபாசப் பட நடிகை ரினி கிரேஸ் கூறி உள்ளார்.

சிட்னி

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல கார் பந்தய வீராங்கனை ரினி கிரேசி. 25 வயதான இவர் ஏராளமான கார் பந்தயங்களில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார். குறிப்பாக 2015-ல் இவரது மார்கெட் உச்சத்தில் இருந்தது.

கொரோனா ஊரடங்கால் கார் பந்தையங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், வருமானம் இன்றி தவித்து உள்ளார். அப்போது அவருக்கு ஆபாசப் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்துள்ளன.

முதலில் ஆபாசப் படங்களில் நடிக்கத் தயங்கினாலும், அதிக வருமானம் வரும் என்பதால் சில படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும், சில காலம் நடிப்பை தொடர உள்ளார்.

ஆபாச படங்களில் நடிக்க நான் எடுத்த முடிவு சரியானது என்று உணர்கிறேன். இதில் நடிக்க ஆரம்பித்தபிறகு நிறைய சம்பாதிக்கிறேன். இந்த பணம் எனது வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கிறத என்று கிரேசி கூறி உள்ளார்.

நிர்வாண புகைப்படங்களை விற்றே 3 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அவர் சம்பாதித்துள்ளதாகவும், ஆபாச பட உலகை விட்டு அவர் செல்ல வாய்ப்பே இல்லை என்றும் கூறி உள்ளார்.

இந்த நிலையில், தனது ஆபாசப் படங்கள் அடங்கிய தளத்தில் அவர் இந்தியர்களுக்கு எதிராக கொந்தளித்துள்ளார்.அதற்கு காரணம் அவரது புகைப்படம் மற்றும் வீடியோவை பலர் அங்கிருந்து எடுத்து, வேறு தளங்களில் பயன்படுத்துவதாகவும், மேலும் இந்தியாவில் சிலர் போலியாக சமூக வலைதள கணக்குகள் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கிரேசி தனது இணைய பக்கத்தில் தனது போலி பக்கங்களை உருவாக்குவதையும் உள்ளடக்கத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதையும் நிறுத்துமாறு பயனர்களைக் கேட்டுக்கொண்டார்.

இந்தியனாக இருந்தால் உள்ளே வராதே... உன்னை வரவேற்கவில்லை என்று அவர் காட்டமாக பதிவிட்டுள்ளார். மேலும், இதற்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவர் கூறி இருப்பதாவது:-

" நான் உங்களுக்கு சொந்தமல்ல. எனது பக்கங்களை உருவாக்குவதை நிறுத்தி, எனது வீடியோக்களையும் படங்களையும் சட்டவிரோதமாக பகிர்வதை நிறுத்துங்கள். நான் இப்போது இந்தியர்களை விரும்பவில்லை. நீங்கள் இந்தியர் என்றால், இப்போது எனது பக்கத்திலிருந்து வெளியேறி விடுங்கள்! உங்களை (sic) இனி இங்கு வரவேற்கவில்லை. என கூறி உள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...