ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு பெண் ஒரே பதவிக்கு காங்கிரஸ்,பா.ஜ.க மற்றும் சுயேச்சை சார்பாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ராஜஸ்தானில் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல்நடந்தது. இந்த நிலையில் அங்குள்ள பிரஜ்நகர் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் கட்சிகள் சார்பில் தாக்கல் செய்த பெண் வத்திகுமாரி என்ற பெண் முதலில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்எல்ஏ வாஜிப் அலி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். மனுவில் கையெழுத்திடும் போது அவர் சிவப்பு நிற புடவையில் முகத்தை மூடியபடி வந்தார்.
அடுத்த சில நிமிடங்களுக்குப் பிறகு, அவர் பச்சை நிற சல்வார்சூட் ஆகமாற்றி துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டு பாஜக வேட்பாளராக இரண்டாவது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.அடுத்த சிறிது நேரத்தில் மூன்றாவது முறையாக, சுயேச்சையாக வேட்பு மனுதாக்கல் செய்வதற்காக, அப்பெண் மஞ்சள் நிற சேலையில் முகத்தை மூடாமல் வந்திருந்தார். அவர் மூன்று கட்சிகளின் சார்பாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ததை யாரும் கண்டு கொள்ள வில்லை.
இதற்கிடையே இந்த தேர் தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவர் ஒரே பதவிக்கு காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் சுயேச்சை என மூன்று வேட்பு மனுக்களை அந்த பெண்தாக்கல் செய்துள்ளார். இதனால் இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.