திருவனந்தபுரம்,
கேரளம் மாநிலத்தில் நேற்று கோழிக்கோட்டில் 4, மலப்புரத்தில் 5, வயநாட் டில் 1 என 10 பேருக்கு ஷிகெல்லா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள் ளது. அந்த வகையில் இந்த ஆண்டு இதுவரை மாநிலம் முழுவதும் 266 பேர் ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நடப்பு ஜூன் மாதம் மட்டும் 190 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதேபோல் நிபா வைரஸ் பாதிப்பு கேரளாவில் குறைந்துள்ளது.
கோழிக்கோடு மருத்துவக்கல்லூரியில் நிபா வைரஸ் பாதித்த நோயாளி ஒரு வர் தொடர்ந்து செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வரு கிறார் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.