தேசிய செய்திகள்

10 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை: 3 சிறுவர்கள் கைது; அசாமில் அவலம்

இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து, போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

பார்பெட்டா

அசாமின் பார்பெட்டா மாவட்டத்தில் பாக்பார் பகுதியில் சாச்ரா கிராமத்தில் வசித்து வந்த 10 வயது சிறுமி வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது உடல்நலம் பாதிக்கப்படவே, பாதியிலேயே பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

வழியில் சிறுமியை 3 சிறுவர்கள் மறித்துள்ளனர். அருகே சணல் பயிரிட்டிருந்த வயலுக்குள் சிறுமியை இழுத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதன்பின்னர் அந்த சிறுமியை கடுமையாக தாக்கி, கழுத்து நெரித்து, படுகொலை செய்து, அந்த இடத்திலேயே போட்டு விட்டு தப்பி விட்டனர்.

பெற்றோர் புகார்

ஆனால், மாலையில் பள்ளி முடிந்த பின்னரும் சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். பல்வேறு இடங்களில் சிறுமியை தேடினர். ஆனால் காணவில்லை.

இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து, போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இரவில் வயலில் கிடந்த சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. சிறுவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.