அரியானா,
அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள சைன்சா கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுவன், தனது வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் 100 ரூபாயை எடுத்துள்ளார். இதனை அந்த சிறுவனின் தாய் கண்டுபிடித்து, அவனை திட்டியதாக தெரிகிறது.
மேலும், தந்தையிடம் இது குறித்து சொல்லப்போவதாக தாய் கூறியதைக் கேட்டு சிறுவன் மிகவும் பயந்துள்ளான். இதனால் அச்சிறுவன் நேராக வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்று, தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டான். சிறிது நேரம் கழித்து மகனை தேடி மாடிக்கு சென்ற தாய், அவன் தூக்கில் தொங்குவதைப் பார்த்து அழுது புலம்பியுள்ளார்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, தூக்கில் தொங்கிய சிறுவன மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனையில் அச்சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை சிறுவன் தூக்கில் தொங்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.