தேசிய செய்திகள்

மும்பையில் ரூ.4 கோடி மதிப்புள்ள 13 ஆயிரம் இ- சிகரெட்டுகள் பறிமுதல்

இ- சிகரெட்டுகளை விற்பனை, விநியோகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம், நவி மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அங்குள்ள சரக்குகளை கையாளும் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், 13 ஆயிரம் இ- சிகரெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.4 கோடி என தெரிவித்தனர்.

இ- சிகரெட்டுகளை தயாரிப்பது, ஏற்றுமதி-இறக்குமதி, விற்பனை, விநியோகம் செய்வது, சேமித்து வைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் உடல்நலத்தை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2026-2027-ம் நிதியாண்டில் இதுவரை ரூ.135 கோடி மதிப்பிலான 3.55 லட்சம் இ- சிகரெட்டுகள், வருவாய் புலனாய்வு துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மராட்டியம், குஜராத், டெல்லி, மேற்கு வங்காளம் ஆகியற்றில் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் மூலம் மின்னணு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. எல்லை தாண்டிய கடத்தலை தடுக்கவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டும் இந்த நவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT