புதுடெல்லி,
அமெரிக்காவில் மில்வாகீ நகரில் ஜி-20 நாடுகளின் வர்த்தக மந்திரிகள் மாநாடு நடந்தது. இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளின் வர்த்தக மந்திரிகள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து, இந்தியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா உள்பட 14 நாடுகளின் வர்த்தக மந்திரிகள் கையெழுத்திட்ட கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், தொழில்துறையின் உபரி உற்பத்தியால், உள்நாட்டு தொழில்கள் பாதிக்கப்படுவதாகவும், தேவைக்கும், வினியோகத்துக்கும் இடையிலான இடைவெளி அதிகரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே. தொழிற்சாலைகளின் உபரி உற்பத்தியை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில், 6 நாடுகள் கையெழுத்திட மறுத்து விட்டன.