தேசிய செய்திகள்

கோவாவை சேர்ந்த 9 மாணவர்கள் உக்ரைனில் சிக்கியுள்ளனர் - முதல்-மந்திரி தகவல்

கோவாவை சேர்ந்த 9 மாணவர்கள் உக்ரைனில் சிக்கியுள்ளனர் என்று அம்மாநில முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

கோவா,

ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் விரைவாக நாடு திரும்பி வருகின்றனர். மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், கோவாவை சேர்ந்த 9 மாணவர்கள் உக்ரைனில் சிக்கியுள்ளனர் என்று அம்மாநில முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் கூறுகையில்,

கோவாவைச் சேர்ந்த 14 மாணவர்கள் உக்ரைனில் படித்து வந்தனர். அதில் 2 பேர் தங்கள் வீடுகளை அடைந்துள்ளனர். 3 பேர் எல்லையைத் தாண்டி ருமேனியாவை அடைந்துள்ளனர். மீதமுள்ள 9 மாணவர்கள் இந்திய தூதரகத்துடன் தொடர்பில் உள்ளனர். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் அனைத்து இந்திய குடிமக்களையும் வெளியேற்ற தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT