தேசிய செய்திகள்

2,500 அக்னி வீரர்களின் தரவுகளை திருடி விற்க முயன்ற 14 வயது சிறுவன்

இணையதளத்தில் இருந்து 2,500 வீரர்களின் விவரங்கள் திருடப்பட்டு, "டார்க் வெப்”பில் அவற்றை விற்பதற்காக விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது.

4 ஆண்டுகால ராணுவப்பணியான அக்னிவீரர்கள் பணி திட்டத்தில் சேர்ந்துள்ள வீரர்கள் தங்களது பணிக்காலத்துக்கு பிறகு அரசின் பிற துறைகளில் சேருவதற் காக சுய விவரங்களை பதிவு செய்து வைக்க தனியாக ஒரு இணையதளம் உள்ள தாக கூறப்படுகிறது. இந்த இணையதளத்தில் இருந்து 2,500 வீரர்களின் விவரங்கள் திருடப்பட்டு, "டார்க் வெப்”பில் அவற்றை விற்பதற்காக விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. அவை அனைத்தையும் 500 டாலருக்கு (சுமார் ரூ.50 ஆயிரம்) தருவதாக விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது.

14 வயது சிறுவன்

இதுபற்றி தகவல் அறிந்த டெல்லி போலீசின் புலனாய்வு ஒருங்கிணைப்பு மற்றும் உத்திசார் செயல்பாடுகள் பிரிவு இதன்பேரில் நடவடிக்கை மேற்கொண்டது. அப் போது "டார்க் வெப்”பில் விளம்பரம் செய்தது அரியானா மாநிலம் பல்லப்காரைச் சேர்ந்த 14 வயது சிறுவன் என தெரியவந்தது. அந்த சிறுவனை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம்

அந்த சிறுவன் இணையதளத்தை "ஹேக்" செய்து தகவல்களை அணுகியதாக தெரிகிறது. சிறுவனின் டிஜிட்டல் சாதனங்களில் இருந்து போலீசார் தரவுகளை மீட் டனர். திருடப்பட்ட அந்த தரவுகளின் உண்மைத்தன்மையை போலீசார் சரிபார்த்து வருகிறார்கள். அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக, அக்னிவீரர்களின் அதிகாரப்பூர்வ தரவுத்தளத்தை தரக்கோரி உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. இதற்கிடையே, கைது செய்யப்பட்ட அந்த சிறுவன் முதல்கட்ட விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டான். அவனையும், பெற்றோரையும் போலீசார் எச்சரித்து உள்ளனர். இதுதொடர்பாக மேல் விசாரணை நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT