தேசிய செய்திகள்

14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: தாயின் கள்ளக்காதலன் கைது

போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர்.

கோழிக்கோடு,

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரா அருகே உள்ள சங்கரோத்து பகுதியை சேர்ந்தவர் ரபீக் (வயது 40). இவருக்கும், கணவரை பிரிந்து வசித்து வந்த ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இந்தநிலையில் அந்த பெண்ணின் 14 வயது மகளை மிரட்டி ரபீக் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் பையோளி போலீசார் ரபீக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்த ரபீக் வெளிநாடு தப்பி சென்றார். பின்னர் அவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. அவரை கைது செய்யாததை கண்டித்து அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர். இந்தநிலையில் உடல் நலக்குறைவால் ரபீக் வெளிநாட்டில் இருந்து கோழிக்கோடு திரும்பி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தகவல் அறிந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT