தேசிய செய்திகள்

சத்தீஷ்கார்: 15 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்புப்படையினர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது.

நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இதன் காரணமாக நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்புப்படையினர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்த நடவடிக்கையால் பல நக்சலைட்டுகள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்து வருகின்றனர். சரணடையும் நக்சலைட்டுகளுக்கு அரசு மறுவாழ்வு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், சத்தீஷ்கார் மாநிலம் மஹசமுண்ட் மாவட்டத்தில் 15 நக்சலைட்டுகள் ஆயுதங்களை கைவிட்டு இன்று போலீசில் சரணடைந்தன.

சரணடைந்தவர்களில் நக்சலைட்டு மூத்த தலைவர் விகாசும் அடக்கம் என போலீசார் தெரிவித்துள்ளனர். சரணடைந்த நக்சலைட்டுகளின் மறுவாழ்வுக்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.