தேசிய செய்திகள்

17 வங்காளதேச ஊடுருவல்காரர்கள் அசாமில் தடுத்து நிறுத்தம்

17 பேரை அசாம் போலீசார் அடையாளம் கண்டு திருப்பி அனுப்பினர்.

திஸ்பூர்,

வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அசாம் மாநிலத்துக்குள் ஊடுருவ முயன்ற 17 பேரை அசாம் போலீசார் அடையாளம் கண்டு திருப்பி அனுப்பினர். இத்தகவலை அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

'சட்டரீதியாக வருபவர்களுக்கு எங்கள் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். ஆனால், சட்டவிரோதமாக நுழைய முயற்சித்தால், அவர்களை திருப்பி அனுப்புவதுதான் ஒரே வழி.'

இவ்வாறு அவர் கூறினார்.