தேசிய செய்திகள்

கொல்கத்தாவில் துர்கா பூஜையின் போது கூட்ட நெரிசல்: 17 பேர் பலி

கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முன்னாள் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அதிர்ச்சி தெரிவித்தார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்தனர்.வடக்கு கொல்கத்தாவில் உள்ள சோர்பாகன் சர்பஜனின் துர்கா பூஜை பந்தலில்இந்தச் சம்பவம் நடைபெற்றது. விழாவில் பங்கேற்க ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெரிசலில் சிக்கி 17 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

முதல்-மந்திரி நேரில் ஆய்வு

கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, மேற்கு வங்காள முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி மற்றும் மாநில தலைமைச் செயலாளர் மனோஜ் அகர்வால் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முன்னாள் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அதிர்ச்சி தெரிவித்தார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். துர்கா பூஜை விழாவின்போது ஏற்பட்ட இந்தக் கூட்ட நெரிசல் அம்மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT