தேசிய செய்திகள்

கேரளாவில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், கொட்டாரக்கரை அருகே உள்ள நெல்லிக்குன்னம் பகுதியில், இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர்கள் உள்பட பேருந்துகளில் இருந்த 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே 2 பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிய சி.சி.டி.வி. காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT