திருநள்ளாறு.
போலி நகையை அடகு வைத்து ரூ.2 லட்சம் மோசடி செய்த என்ஜினீயர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் பழைய காய்கறிக்கடை வீதியில் வசித்து வருபவர் தத்தா (வயது 40). இவர் காரைக்கால்-திருநள்ளாறு சாலையில் நகை அடகுக்கடை நடத்தி வருகிறார். அவருக்கு ஏற்கனவே பழக்கமுள்ள திருவாரூர் பேரளம் பகுதியை சேர்ந்த சுரேந்தர் (35) என்பவர் அணுகி தன்னிடம் பல்வேறு நகைகள் இருப்பதாகவும், அதனை அடகு வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து சுரேந்தர் தனது நண்பரான திருவாரூர் அம்பல்திருமாளத்தை சேர்ந்த கார்த்தி (43) என்பவருடன் நகை அடகுக்கடைக்கு வந்து 2 பவுன் நகையை கொடுத்து ரூ.2 லட்சத்தை பெற்று சென்றனர். பின்னர் அந்த நகையை தத்தா பரிசோதனை செய்தபோது, அது போலி நகை என்பது தெரியவந்தது.
இதுகுறித்து நகை அடகுக்கடை உரிமையாளர் தத்தா நகர போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேந்தர், கார்த்தி ஆகியோரை கைது செய்தனர். இதில் சுரேந்தர் சிவில் என்ஜினீ யர் என்பதும், கார்த்தி உணவு டெலிவரி ஊழியர் என்பதும் தெரியவந் தது. அவர்களுக்கு போலி நகையை தயாரித்துக் கொடுத்த கும்பகோ ணத்தை சேர்ந்த ஜெகன் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கைதான 2 பேரிடம் இருந்து போலி நகை தயாரிக்கும் எந்திரம், மோசடி செய்த ரூ.2 லட்சம், 2% கிலோ எடையுள்ள போலி தங்க கட்டிகள், தலா 5 பவுன் எடையுள்ள 40 போலி தங்கச் சங்கிலிகள் என சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான போலி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் அவர்கள் போலி நகை தயாரிக்கும் கம்பெனியை நடத்தி தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதி முழுவதும் போலி நகைகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
அத்துடன் அவர்கள் காரைக்காலில் வேறு ஏதேனும் அடகு கடை மற்றும் வங்கிகளில் போலி நகை அடகு வைத்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.