தேசிய செய்திகள்

காஷ்மீர் என்கவுன்டர்: பாதுகாப்புப்படையினர் - பயங்கரவாதிகள் மோதல்

பயங்கரவாதிகள் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என பாதுகாப்புப்படையினர் தெரிவித்துள்ளனர்

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஷ்மீர் என்கவுன்டர்

இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டம் மீமண்டர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் வனப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப்படையினர் பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வனப்பகுதியில் பதுங்கியுள்ள 2 பயங்கரவாதிகளும் குல்காம் மாவட்டத்தை சேர்ந்த சாகீர், லதீப் என்பது தெரியவந்துள்ளது. இருவரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என பாதுகாப்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.