தேசிய செய்திகள்

2027-ம் ஆண்டு கும்பமேளா; உத்தராகண்ட் முதல்-மந்திரி ரூ.1,252 கோடி நிதி ஒதுக்க ஒப்புதல்

அரித்துவார் கங்கை வழித்தட திட்டத்தின் கீழ் வடக்கு ஹர் கி பாவ்ரி மறுசீரமைப்பு பணிக்காக ரூ.69.06 கோடியும் நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

டேராடூன்

உத்தராகண்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கும்பமேளா நிகழ்ச்சிகளுக்கான திட்ட பணிகளுக்காக ரூ.1,252 கோடி நிதி ஒதுக்க முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, உட்கட்டமைப்பை வலுப்படுத்துதல், பேரிடர் மேலாண் சாதனங்களை மேம்படுத்துதல் மற்றும் குடிநீர் விநியோகம் மற்றும் வெள்ள பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகளை மேம்படுத்துவதற்காக இந்த நிதி பயன்படும்.

இதுதவிர, ரிஷிகேஷ் கங்கை வழித்தட திட்டத்தின் கீழ் திரிவேணி பாதையை மறுசீரமைப்பு செய்வதற்காக ரூ.115 கோடி ஒதுக்கவும் ஒப்புதல் அளித்துள்ளார். அரித்துவார் கங்கை வழித்தட திட்டத்தின் கீழ் வடக்கு ஹர் கி பாவ்ரி மறுசீரமைப்பு பணிக்காக ரூ.69.06 கோடியும் நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

இதேபோன்று ஆதி கைலாஷ் புனித யாத்திரை இன்று தொடங்கியது. இந்த பயணம் சிறப்புற அமைவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகவுள்ளன என்றும் அதற்காக மாநில அளவில் முற்றிலும் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் கூறினார். பொதுவாக ஒரு சில நூற்றுக்கணக்கானோர் வருகை தர கூடிய இந்த யாத்திரையானது, கடந்த ஆண்டில் 40 ஆயிரம் மக்கள் என்ற சாதனை அளவை அடைந்திருந்தது.