தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது

கர்நாடக மாநிலம் மதனப்பள்ளி அருகே கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீகாளஹஸ்தி,

சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியை அடுத்த நீருகுட்டவாரிப்பள்ளியில் உள்ள ஒரு டீக்கடையில் வாலிபர்கள் பலர் செல்போனில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதியினர் மதனப்பள்ளி 2-டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் நரசிம்மலு தலைமையில் போலீசார் விரைந்து வந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.38 ஆயிரத்து 380, 15 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT