தேசிய செய்திகள்

அசாம் அருகே கோர விபத்து: 23 பேர் உயிரிழப்பு

போகாகட்டில் இருந்து நாகான் நோக்கிச் சென்ற டெம்போ வேன் மீது லாரி மோதி விபத்து நேரிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கவுகாத்தி,

அசாம் மாநிலம் காசிரங்காவில் டெம்போ வேன் மீது லாரி மோதிய கோர விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்.

அசாம் மாநிலத்தில் உலக புகழ் பெற்ற வனவிலங்கு சரணாலயமான காசிரங்காவில் போகாக்கட்டிலில் இருந்து நாகோன் பகுதிக்கு மினி பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஏராளமான பள்ளி மாணவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ரோங்காஜன் பகுதியில் வந்துக்கொண்டிருந்த போது அதிவேகத்தில் வந்த சரக்கு லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் டெம்போ வேன் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த கோர விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார், மீட்புக்குழுவினர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே உயிரிழந்த உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த கோர விபத்து தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT