தேசிய செய்திகள்

ஒரே மாதத்தில் 2,547 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் - இதுவரை இல்லாத புதிய சாதனை!

இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது 23 சதவீதம் அதிகமாகும்.

புது டெல்லி,

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், யு.பி.ஐ. (UPI) மூலம் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 2,547 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது 23 சதவீதம் அதிகமாகும்.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை

இந்தப் பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு ரூ.31.53 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. நாட்டில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வரும் வரவேற்பையே இந்தப் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.

புதிய சாதனை

மேலும், அக்டோபர் மாதத்தில் தினசரி சராசரியாக ரூ.1.01 லட்சம் கோடி மதிப்பிலான யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. தினசரி சராசரிப் பரிவர்த்தனை மதிப்பு ரூ.1 லட்சம் கோடியைக் கடந்தது இதுவே முதல் முறையாகும்.

சிறிய கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை யு.பி.ஐ. பணப் பரிவர்த்தனை முறை பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த வளர்ச்சி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைத் துறையில் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT