தேசிய செய்திகள்

அசாமில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவு

அசாம் மாநிலத்தில் இன்று மாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் இன்று மாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு தெரிவித்துள்ளது.

மாலை 4.52 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம் கம்ரூப் மாவட்டத்தில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்தது. மிகப்பெரிய நகரமான கவுகாத்தி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

உயிர் சேதம் அல்லது பொருள் சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. வடகிழக்கு பகுதி, அதிக நில அதிர்வு மண்டலத்தில் இருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.