மத்திய அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது. இதன்படி, நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 815 வரை அதிகரிக்கப்படுகிறது. மாநிலங்களுக்கு இடையிலான தொகுதி பங்கீடு 2051-ம் ஆண்டு வரை மாற்றப்படாது. பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு தி.மு.க. . ஆதரவு அளிக்கும் என்று நேற்று முன் தினம் அந்த கட்சி அறிவித்தது. மேலும் தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, மசோதாவிற்கு தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டினை தெரிவித்தனர்.
. சரத்பவாரின் தேசிய வாத காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை 371 எம்.பி.க்கள் ஆதரித்து வாக்களிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு 360 வாக்குகள் தேவைப்படும் நிலையில் தற்போது 371 எம்.பி.க்களின் ஆதரவு தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.