புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலத்தின் குர்தா மாவட்டத்தில் உள்ள கோபிநாத்பூர் அருகே உள்ள ஹட்பஜாரை சேர்ந்த எல். ஈஸ்வர் ராவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு மினியேச்சர் கலைஞர். பல ஆண்டுகால அனுபவம் கொண்ட ஒரு சிறந்த நுண்கலை கலைஞர். ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைகளின் போது ஏதாவது ஒரு புதுமையை செய்வது அவரது வழக்கம்.
இந்தநிலையில் ராம நவமி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுவதையொட்டி,
அயோத்தி ராமர் கோவிலை மையமாக வைத்து ஒரு படைப்பை உருவாக்க அவர் திட்டமிட்டார். அதன்படி இந்த ஆண்டு ராம நவமியை முன்னீட்டு சாக்பீஸை பயன்படுத்தி அயோத்தி ராமர் கோவிலின் ஒரு விரிவான மினியேச்சர் மாதிரியை உருவாக்கி அசத்தி உள்ளார். இந்த தனித்துவமான படைப்பின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் அவர்.
சுமார் 7 நாட்கள் இரவு பகலாக உழைத்து, வெறும் 4 அங்குல உயரமும், 4 அங்குல நீளமும் கொண்ட மிகச்சிறிய ராமர் கோயில் மாதிரியை தத்ரூபமாக செதுக்கி உள்ளார். இதில் கோவிலின் கோபுரங்கள், தூண்கள் மற்றும் நுணுக்கமான வேலைப்பாடுகள் அப்படியே தத்ரூபமாகப் பிரதிபலிக்கின்றன.
இந்த சிறிய படைப்பின் மூலம் ராம நவமி திருவிழாவிற்கு எனது வாழ்த்துகளையும், அமைதி மற்றும் பக்தியின் செய்தியையும் மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்புகிறேன்" என்கிறார் ஈஸ்வர் ராவ்.