தேசிய செய்திகள்

சூரத்-சென்னை விரைவுச்சாலையில் விபத்து - 4 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம் துல்ஜாபூரில் உள்ள பவானி தேவி கோவிலுக்கு சென்றுவிட்டு சனிக்கிழமை தங்களது சொந்த ஊருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் சூரத் - சென்னை விரைவுச்சாலையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் பாலத்தின் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர், மகாராஷ்டிர மாநிலம் துல்ஜாபூரில் உள்ள பவானி தேவி கோவிலுக்கு சென்றுவிட்டு சனிக்கிழமை தங்களது சொந்த ஊருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஷாபூர் தாலுகாவில் உள்ள இப்ராகிம்பூர் அருகே சூரத் - சென்னை விரைவுச்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அங்கு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் பாலத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மற்ற 2 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர்களும் சில மணி நேரங்களில் உயிரிழந்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் குருராஜ் சுரேஷ் சவான் (29), ரெட்டி பக்லா ரத்தோட் (33), கோவிந்தா சீத்தியா சவான் (28), குமார் ராமு ரத்தோட் (26) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்த விபத்தில் கார் முற்றிலும் உருக்குலைந்து போனதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து ஷாபூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT