தேசிய செய்திகள்

ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 4 வாலிபர்கள் பஸ் மோதி பலி

விபத்து நடந்த சத்தம்கேட்டு ஓடிவந்த அந்தப்பகுதி மக்கள் விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ்சை அடித்து நொறுக்கினர்.

புனே,

ஒரு மோட்டார் சைக்கிள் 4 வாலிபர்கள் பர்பானி மாவட்டம் மன்வத் என்ற பகுதியில் நேற்று முன்தினம் இரவு 4 வாலிபர்கள் ஆபத்தை உணராமல் ஒரே மோட்டார் சைக்கிளில் அமர்ந்து பயணித்தனர். அப்போது புனே நோக்கி அதிவேகமாக வந்த ஒரு தனியார் பஸ் எதிர்பாராத விதமாக வாலிபர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த சுபம் அப்பாராவ் தகே(வயது 30), விஷ்ணு கோரே(28), பிரகலாத் அசோக்ராவ் குடே(29) மற்றும் நவநாத் ஷாம்ராவ் ஜாதவ்(35) ஆகிய 4 வாலிபர்களும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

பஸ்சை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

இதற்கிடையே விபத்து நடந்த சத்தம்கேட்டு ஓடிவந்த அந்தப்பகுதி மக்கள் விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ்சை அடித்து நொறுக்கினர். இதனால் பர்பானி-பாத்ரி நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பதற்றமான சூழல் நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பலியான 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அலட்சியமாக பஸ்சை ஓட்டி உயிர்பலி வாங்கிய டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.