இம்பால்,
இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் தபோ குக்கி கிராமத்தில் நேற்று முன்தினம் இரு போட்டிக்குழுக்களிடையே ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் ஒரு பெண் பலியானார். அதை கண்டித்து, கங்க்போக்பியைச் சேர்ந்த பழங்குடியினர் ஒற்றுமை குழு என்ற அமைப்பு, கங்க்போக்பி மாவட்டத்தில் 48 மணி நேர முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்தது.
நேற்று முன்தினம் நள்ளிரவு முழுஅடைப்பு தொடங்கியது. மார்க்கெட்டுகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் இருந்து மத்திய, மாநில படைகளை வாபஸ்பெற வேண்டும் என்று பழங்குடியினர் ஒற்றுமை குழு கோரிக்கை விடுத்துள்ளது.