தேசிய செய்திகள்

சிக்கிமில் திடீர் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 4.9-ஆக பதிவு

மாநிலத் தலைநகர் உட்பட கிழக்கு சிக்கிமின் சில பகுதிகளிலும் லேசான அதிர்வுகள் உணரப்பட்டன.

கேங்டாக்,

மேற்கு சிக்கிமில் 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து தலைநகர் கேங்டாக்கில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டன.

நிலநடுக்கம்

இன்று (வியாழக்கிழமை) அதிகாலை சிக்கிம்-நேபாளப் பகுதியில் 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், மாநிலத் தலைநகரான கேங்டாக் உட்பட மேற்கு மற்றும் சிக்கிமின் சில பகுதிகளில் லேசான அதிர்வுகள் ஏற்பட்டன.

இந்த நிலையில் இந்த நிலநடுக்கத்தால் சொத்து சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் உறுதிபடுத்தப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்கு சிக்கிம்

தேசிய நில அதிர்வு ஆய்வு மையத்தின் (NCS) தகவல்படி, இந்த மிதமான நிலநடுக்கம் அதிகாலை 4.30 மணிக்கு ஏற்பட்டது. இதன் மையப்புள்ளி, மேற்கு சிக்கிமின் கியால்ஷிங் மாவட்டத்தில் உள்ள யுக்சோமிலிருந்து சுமார் 40 கி.மீ வடமேற்கில் அமைந்திருந்தது. இந்த நிலநடுக்கம் 73 கி.மீ ஆழத்தில், வடக்கு அட்சரேகை 27.671 டிகிரி மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 87.987 டிகிரியில் பதிவானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிர்வுகள்

இந்த நிலநடுக்கம், மேற்கு சிக்கிமின் பல பகுதிகளிலும், மாநிலத் தலைநகர் உட்பட கிழக்கு சிக்கிமின் சில பகுதிகளிலும் லேசான அதிர்வுகள் உணரப்பட்டன.

SCROLL FOR NEXT