தேசிய செய்திகள்

5 சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு - மத்திய அரசு நடவடிக்கை

5 சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுடெல்லி,

சி.பி.ஐ. அதிகாரிகள் 5 பேர், ஒரு மூத்த வக்கீல் ஆகியோருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. பொதுநலன் கருதி, அடிப்படை விதிகளின் 56 (ஜே) பிரிவின்கீழ் அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பிரிவின்கீழ் எந்த ஓர் ஊழியர் மீதும் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT