இட்டாநகர்,
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த மியான்மர் நாட்டினர் 5 பேரை பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர்.
இந்தியாவின் அண்டை நாடு மியான்மர். இந்நாட்டில் இருந்து வடகிழக்கு மாநிலங்கள் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முடியும்.
இந்நிலையில், மியான்மரில் இருந்து அருணாச்சலபிரதேச மாநிலத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 5 பேரை பாதுகாப்புப்படையினர் நேற்று கைது செய்தனர்.
அம்மாநிலத்தின் சங்லங் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரும் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரும் மியான்மரில் செயல்பட்டுவரும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் உள்ளவர்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.