தேசிய செய்திகள்

2 அம்ரித் பாரத் உள்பட 5 புதிய ரெயில் சேவைகள் - பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

ரெயில்வே மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து, சில திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

சென்னை,

திருச்சியில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அப்போது, எரிசக்தி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, நெடுஞ்சாலை துறை, ரெயில்வே மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

ரெயில்வே திட்டங்களை பொறுத்தவரையில், நாகர்கோவில்-சார்லபள்ளி, போத்தனூர்-தன்பாத் இடையே 2 அம்ரித் பாரத் ரெயில்களையும், ராமேசுவரம்-மங்களூரு, நெல்லை-மங்களூரு இடையே 2 எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை, மயிலாடுதுறை-காரைக்குடி இடையே ஒரு பயணிகள் ரெயில் சேவைகளையும் தொடங்கி வைக்கிறார்.

அதன்படி, நாகர்கோவில்-சார்லபள்ளி அம்ரித் பாரத் ரெயிலானது வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர், சூலூர்பேட்டை வழியாக இயக்கப்படும். போத்தனூர்-தன்பாத் அம்ரித் பாரத் ரெயிலானது கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருத்தணி வழியாக இயக்கப்படும்.

ராமேசுவரம்-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும். நெல்லை-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.