தேசிய செய்திகள்

மணிப்பூர்: 6 பயங்கரவாதிகள் கைது

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் பாதுகாப்புப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இம்பால்,

மணிப்பூரில் 2023ம் ஆண்டு இரு இனக்குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் வன்முறையாக மாறியதையடுத்து அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

பின்னர், ராணுவம் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுக்கொள் கொண்டுவரப்பட்டது. மேலும், அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி கடந்த ஆண்டு விலக்கிக்கொள்ளப்பட்டது

அதேவேளை, மணிப்பூரில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் பாதுகாப்புப்படையினர் இறங்கியுள்ளார்.

இந்நிலையில், மணிப்பூரின் மேற்கு இம்பால், டென்கினொபல், தவ்பெல் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்புப்படையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு பகுதிகளில் பதுங்கி இருந்த 6 பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களையும் பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பயங்கரவாதிகளிடமும் பாதுகாப்புப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.