தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட்டில் அதிர்ச்சி: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி ஆசிரியர்

ஜார்க்கண்ட் மாநிலம் சாகிப்கஞ்ச் மாவட்டம் பிரஹிபிட் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பள்ளி விடுதியில் தங்கி இருந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் சாகிப்கஞ்ச் மாவட்டம் பிரஹிபிட் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 30 வயதான இளைஞர் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

பாலியல் வன்கொடுமை - கைது

இவர் கடந்த 15ம் தேதி பள்ளி விடுதியில் தங்கி இருந்த 6 வயதான சிறுமியை (மாணவி) பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் நேற்று கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.