தேசிய செய்திகள்

பல்வேறு நாடுகளில் இருந்து 615 பழங்கால பொருட்கள் மீட்பு - மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத்

கர்நாடகாவின் மண்டியாவில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் இருந்து திருடப்பட்ட விநாயகர் சிலை போன்றவை முறையே கடந்த 2021, 2022-ம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்டு உள்ளன.

புதுடெல்லி,

இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை மத்திய அரசு மீட்டு நாட்டுக்கு கொண்டு வருகிறது. அப்படி கடந்த 5 ஆண்டுகளில் மீட்கப்பட்ட பொருட்களின் விவரங்கள் குறித்து மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

மந்திரி கஜேந்திர சிங் செகாவத்

இதற்கு நேற்று கலாசாரத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத் எழுத்து மூலம் பதிலளித்தார். இதில் ஆண்டு வாரியாக மீட்கப்பட்ட பொருட்களின் விவரங்களை அவர் குறிப்பிட்டு இருந்தார். அவர் கூறும்போது, 'பல்வேறு நாடுகளில் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு முதல் கடந்த 30-ந்தேதி வரை சிலைகள் உள்பட 615 பழங்கால பொருட்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன' என தெரிவித்தார்.

அவர் வழங்கிய பட்டியலில் உள்ள கோவில் சிலைகளில் முக்கியமாக, ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கோவில் ஒன்றில் இருந்து திருடப்பட்ட நந்தி சிலை, கர்நாடகாவின் மண்டியாவில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் இருந்து திருடப்பட்ட விநாயகர் சிலை போன்றவை முறையே கடந்த 2021, 2022-ம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்டு உள்ளன.

SCROLL FOR NEXT