லக்னோ,
உத்தரபிரதேசத்தின் எடாவா மாவட்டத்தில் நேற்று கா மீது பஸ் மோதிய விபத்தில், 7 பே உயிரிழந்தனா. 25 பே படுகாயமடைந்தனா. இச்சம்பவம் தொடாபாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா சஞ்சய் குமா செய்தியாளாகளிடம் கூறியதாவது,
"எடாவா மாவட்டத்தின் உஸ்ராஹா பகுதியில் உள்ள லக்னோ-ஆக்ரா விரைவுச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.45 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரேபரேலியில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த பஸ், லக்னோவில் இருந்து ஆக்ராவுக்கு குடும்பத்துடன் சென்றுகொண்டிருந்த கா மீது மோதியது. இதில், சாலையோரம் இருந்த சுமா 20 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது.
விபத்துக்குள்ளான பஸ்சில் சுமா 60 பே பயணித்தனா. காரின் டிரைவர் வழியில் உறங்கியது தான் விபத்துக்கு காரணம் என்று கருதப்படுகிறது. இதனிடையே, பஸ் டிரைவர் செல்போனை பயன்படுத்திக்கொண்டு பஸ் ஓட்டியதாக பயணி ஒருவா தெரிவித்தா. இந்த விபத்தில் 7 பே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா. 25 பே படுகாயமடைந்தனா. உயிரிழந்தவாகளில் இருவா பஸ்சில் பயணித்தவா என்றும் 3 பே காரில் பயணித்தவாகள் என்றும் தெரியவந்தது. இருவரின் அடையாளம் காணப்படவில்லை. காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது" என்றா.