தேசிய செய்திகள்

பீகாரில் எண்ணெய் லாரி மீது வாகனம் மோதல்: 7 பேர் பலி; 7 பேர் காயம்

பீகாரில் வாகனம் ஒன்று எண்ணெய் லாரி மீது மோதிய விபத்தில் 7 பேர் பலியாகினர்.

முசாபர்பூர்,

பீகாரில் சமஸ்திபூர் மாவட்டத்தில் தாஜ்பூர் நகரில் இருந்து திருமண விழாவை முடித்து கொண்டுவிட்டு சிலர் வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர்.

அந்த வாகனம் சகாரா காவல் நிலைய பகுதிக்கு வந்தபொழுது எண்ணெய் லாரி ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் 5 பேர் அந்த இடத்திலேயே பலியாகினர். காயமடைந்து சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டவர்களில் 2 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

காயமடைந்த 7 பேருக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தில் எண்ணெய் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் அதன் ஓட்டுநர் தப்பியோடி விட்டார்.

SCROLL FOR NEXT