ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், அந்தக் கட்சியின் மேல்சபை துணைத் தலைவர் ராகவ் சத்தாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதனால் ஆம் ஆத்மி மேல்சபை எம்.பி.க்கள் குழு துணைத் தலைவர் பதவியில் இருந்து ராகவ் சத்தா சமீபத்தில் நீக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து கட்சி தலைமையின்மீது அவர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தார். இந்த நிலையில் ராகவ் சத்தா, சந்தீப் பாடக், அசோக் மித்தல், சுவாதி மாலிவால், ஹர்பஜன் சிங், ராஜேந்திர குப்தா, விக்ரம் ஷைனி ஆகிய 7 மேல்சபை எம்.பி.க்கள் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து திடீரென விலகினர். அவர்கள் பா.ஜ.க.வில் இணைகிறார்கள்.
மேல்சபையில் ஆம் ஆத்மி கட்சிக்கு 10 எம்.பி.க்கள் உள்ளனர். அதில் 3-ல் இரண்டு பங்கு எம்.பி.க்கள் கட்சியில் இருந்து விலகுவது தொடர்பான கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். கட்சியில் இருந்து விலகுவது தொடர்பான ஆவணத்தை மேல்சபை தலைவரிடம் அவர்கள் அளித்துள்ளனர். இந்த தகவலை ராகவ் சத்தா தெரிவித்தார்.7 மேல்சபை எம்.பி.க்களும் பா.ஜ.க.வில் இணைவதற்கான கடிதம் மேல்சபை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் அளிக்கப்பட்டது.
இதனிடையே, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் மாநிலங்களவை தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கட்சியை விட்டு வெளியேறிய 7 எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். கட்சித் தாவல் தடுப்பு சட்டம் தெளிவாகக் கூறுவது என்னவெனில், மாநிலங்களவை மற்றும் மக்களவையில் ஏற்பட முடியாது. எனவே, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தாலும் கூட சட்ட ரீதியான அங்கீகாரம் எதுவும் கிடைக்காது” என்று தெரிவித்துள்ளார்.