தேசிய செய்திகள்

7 ஆண்டு காதல்.. ஏமாற்றிய காதலன்.. யாரும் எதிர்பாரா சம்பவம் செய்த இளம்பெண்.!

தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்யக்கூடாது என காதலி சண்டை போட்டுள்ளார்.

லகனோ,

7 ஆண்டு காதல்

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர் சோனியா (21)பி.எஸ்சி. மாணவியான இவர், உத்தரபிரதேசத்தை சேர்ந்த அங்குஷ் (24) என்ற வாலிபரை கடந்த ஏழு ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவர் கடற்படையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சோனியாவை திருமணம் செய்ய அன்குஷின் பெற்றோர் மறுத்து விட்டனர். எனவே அங்குஷுக்கு அவரது குடும்பத்தினர் வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்தனர்.

வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம்

இதையறிந்த சோனியா கடும் ஆத்திரமடைந்தார். எனவே தன்னை திருமணம் செய்யுமாறு அங்குஷை வலியுறுத்தி வந்தார். மேலும் தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்யக்கூடாது என சண்டைபோட்டார். ஆனால் அவர் சோனியாவை கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் அங்குஷுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்த விழா ஏற்பாடுகள் நடந்தன. இதற்காக நண்பர்கள், உறவினர்கள் திரண்டனர். இதையறிந்த சோனியா, காதலனுக்கு தக்க பாடம் புகட்ட எண்ணினார்.

சம்பவம் செய்த இளம்பெண்

இதையடுத்து, மேளதாளங்கள் முழங்க தன்னுடன் அங்குஷ் திருமணக் கோலத்தில் இருப்பது போன்ற படங்கள் கொண்ட பேனருடன் அங்குஷின் வீட்டுக்குச் சென்ற சோனியா, தனது காதலுக்கு நியாயம் வேண்டும் என அங்கு ரகளையில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்புநிலவியது.

பின்னர் அங்குள்ளவர்கள் சமாதானம் செய்ய முற்பட்டனர். அப்போது, அப்பெண்ணுக்கும் அவரது காதலனின் குடும்பத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அப்பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

SCROLL FOR NEXT