தேசிய செய்திகள்

காஷ்மீர்: இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் முதியவர்

பாதுகாப்புப்படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் சம்பா மாவட்டம் ராம்கட் பகுதியில் உள்ள சர்வதேச எல்லையில் நேற்று நள்ளிரவு பாதுகாப்புப்படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பாகிஸ்தானில் இருந்து சர்வதேச எல்லை வழியாக முதியவர் வந்ததை பாதுகாப்புப்படையினர் கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த முதியவரை பிடித்து பாதுகாப்புப்படையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லெஹரி ஹர்ட் கிராமத்தை சேர்ந்த அப்துல் ஹசன் (வயது 70) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த முதியவரை விசாரணைக்குப்பின் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் எல்லைப்பாதுகாப்புப்படையினர் ஒப்படைத்தனர்.