தேசிய செய்திகள்

மண்ணில் புதைந்திருந்த 80 ஆண்டு கால வெடிகுண்டு மீட்பு

அசாம் காவல்துறையினரும் மற்றும் பாதுகாப்புப் படையினரும் அப்பகுதியை குடியிருப்பாளர்களை முன்னெச்சரிக்கையாக அங்கிருந்த வெளியேற்றினர்.

அசாம்,

அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டம் அருகே லெடோ-லேகாபானி பகுதியில் இரண்டாம் உலகப் போர் காலத்தைச் சேர்ந்த வெடிக்காத வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

சிங்ரி கிராமத்தில் உள்ள ஒரு கடையின் அருகே அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடந்தபோது, சுமார் 80 ஆண்டுகளாக மண்ணில் புதைந்திருந்த வெடிகுண்டு கண்டறியப்பட்டது. இந்த வெடிகுண்டு சுமார் 12 அங்குல நீளமும், 6 அங்குல விட்டமும் கொண்டது. தகவல் அறிந்ததும் அசாம் காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் அப்பகுதியைச் சுற்றி வளைத்து, முன்னெச்சரிக்கையாக அங்கிருந்த குடியிருப்பாளர்களை வெளியேற்றினர்.

பின்னர் இந்திய ராணுவத்தின் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அந்த வெடிகுண்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வெற்றிகரமாகச் செயலிழக்கச் செய்யப்பட்டது.