கனமழைக்கு 81 பேர் பலி  
தேசிய செய்திகள்

உத்திர பிரதேசத்தில் கனமழைக்கு 81 பேர் பலி

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

லக்னோ,

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2 நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 81 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 46 பேர் காயமடைந்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் 75 மாவட்டங்களில் 56 மாவட்டங்கள் வழக்கத்தை விட மிக அதிக அளவிலான மழையைப் பதிவு செய்துள்ளது.

கடந்த 48 மணிநேரத்தில் சராசரியாக 66.5 மில்லிமீட்டர்மழை பதிவாகியுள்ளது. இது வழக்கமான அளவை விட மிக அதிகமாகும். இந்த பேரிடரால் மாநிலம் முழுவதும் 1021 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் 107 கால்நடைகளும் உயிரிழந்துள்ளதாக மாநில நிவாரண ஆணைய அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாகசீதாபூரில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். லக்கிம்பூர் கேரி, பஹ்ரைச் மற்றும் பலராம்பூர் ஆகிய மாவட்டங்களில்தலா5பேர் உயிரிழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மழையால் சேதமடைந்த பயிர்களின் கணக்கெடுக் கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT