தேசிய செய்திகள்

குழந்தை பெற மருத்துவமனைக்கு வந்த 12 வயது சிறுமி - தங்கையை கர்பமாக்கிய அண்ணன்

ஆந்திராவில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய அண்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருப்பதி,

ஆந்திர மாநிலம், நெல்லூர் அடுத்த கிராமத்தை சேர்ந்தவர் 50 வயது விவசாயி. இவருக்கு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரது முதல் மனைவி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கணவரிடம் 2 குழந்தைகளையும் விட்டுவிட்டு வேறு ஒருவருடன் சென்றுவிட்டார்.

இதையடுத்து விவசாயி 2-வதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 12 வயது சிறுமி உள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் விவசாய நிலத்திற்கு சென்று விடுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக சிறுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.

இதனை பயன்படுத்திக் கொண்ட முதல் மனைவியின் மகன் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் தந்தை இருவருக்கும் தெரியவந்துள்ளது. இருப்பினும் அவர்கள் இந்த சம்பவத்தை வெளியே தெரியாமல் பார்த்துக் கொண்டனர்.

இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சிறுமிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. சிறுமியை அவரது பெற்றோர் பிரசவத்திற்காக நெல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 12 வயது சிறுமி பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டால் சந்தேகமடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் இது குறித்து நெல்லூர் சைல்டு ஹெல்ப் லைன் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதிகாரிகள் ஆஸ்பத்திரிக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியின் அண்ணனே சிறுமியை கர்ப்பமாக்கிய தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சிறுவனை தேடி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்