ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் பாலோடி மாவட்டம் புனி கி தானி பகுதியைச் சேர்ந்த சிறுவன் போமரம் (வயது 9). இவன் கடந்த வியாழக்கிழமை, அப்பகுதியில் உள்ள 1,050 அடி ஆழ ஆள்துளை கிணற்றில் தவறி விழுந்தான். தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படை ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்கள், மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
39 மணி நேர நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அச்சிறுவன் மீட்கப்பட்டான். பின்னர் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கான சிறுவன் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவன் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். 39 மணி நேர நீண்ட போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.